Aanmigam
Friday, 28 June 2013
மாமிசத்தை உண்ணாமல் இருப்பவன் ,
மனம் அடக்கிய முனிவனை விட உயர்ந்தவன் .
பொன்னை தானம் செய்தவன் ,
நீண்ட ஆயுளுடன் இருப்பான் .
பூமி தானம் செய்தவன் ,
இந்த பூமியை ஆளும் வாய்ப்பு உண்டாகும் .
தண்ணீர் தானம் செய்பவனுக்கு,
பசி,தாகம்,பிரச்சினை என்றும் உண்டாகாது .
அமாவாசை பெளர்ணமி நாட்களில்,
தெய்வங்களை வணங்கவேண்டும்
பிறர்க்கு கொடுப்பவன் ,
கடவுளுக்கு கடன் தருபவன் ,
அவர் இருமடங்காய்த் தருவார் .
செய்த வினையையும்,
செய்கின்ற தீ வினையையும்,
ஓர் எதிரொலியைக் ,
காட்டாமல் மறையா மாட்டா
பிர்மலோகம் , கைலாசம் வைகுண்டம் போன்றவை ,
தெய்வங்கள் வாழும் உலகம்
பிதுருலோகம் , இறந்தவர் வாழும் உலகம் .,
கந்தர்வலோகம் , பூமியில் ஏராளமான நற்பணிகள் செய்தவர்கள் ,
தங்கள் புண்ணிய பலன்களை அனுபவிக்க செல்லும் உலகம் .
Thursday, 27 June 2013
எண்ணமும் செயலும் நல்லதாக இருந்தால் ,
தனியே இறைவழிபாடு தேவை இல்லை .
ஆண்டவன் மனதில் இருந்தால்,
ஆணவம் அணுகாது .
பதவி சாதிக்க முடியாததையும்,
பக்தி சாதிக்கும் .
எல்லோர்க்கும் பெரியவனான இறைவனை ,
பார்க்கப் போகும் போது ,
வெருங்கையுடன் போகக்கூடாது .
இன்றைய மனித குலத்தில் ,
ஒவ்வொரு சாதியையும் ,
ஒவ்வொரு தெய்வத்தை ,
வைத்து வணங்கி வருகிறது ,
என்றாலும் ஆன்மா என்பது ஒன்றுதான் .
உடல் நலிவுற்றவன் உணவை வெறுக்கிறான்,
உள்ளம் நலிவுற்றவன் கடவுளை வெறுக்கிறான் .
நரசிம்ம சுவாமியின் விக்ரகம் வீட்டில் இருந்தால்,
எல்லா விதமான நன்மைகளும் ஏற்ப்படும் .
சோதனை காலம் வரும்போது ,
கடவுள் நம்பிக்கை குறைந்து விடக்கூடாது .
தொடர்ந்து தியானம் செய்தால் ,
பலன் கிடைப்பது உறுதி .
இறைவனுக்கு தலை வணங்கு ,
உனக்கு தலை குனிவு ஏற்ப்படாது .
பிறர் மகிழ்ச்சியில் ,
தான் மகிழ்பவனே உண்மையான பக்தன் .
கவலை என்ற மேகத்தை ,
கடவுளை வழிபட்டால் விளக்கலாம் .
அகந்தையை இறக்கிவைத்தால் ,
ஆண்டவன் நம்மைச் சுமப்பான் .
நல்லதை நினைப்பவர்களுக்கு,
இறைவன் நாடி வந்து அருள் புரிகிறான் .
மற்றவரை நேசிப்பவன் ,
ஆண்டவனின் அன்புக்கு உரியவனாகிறான் .
உண்மையான பக்தி ,
ஆண்டவன் அரவணைப்பை உணரும் .
படித்தவனுக்கு பரீச்சை ,
பக்தனுக்கு சோதனை .
ஆரோக்கியமான உடலே ஆன்மாவின் கோயில் ,
பக்தி எனும் செடி பாறை,
மனதிலும் முளைக்கும் .
புனிதத்தலத்துக்குப் போய் வருகிறவர்களுக்கு,
கொஞ்சகாலம் கழித்தே பலன் கிடைக்கும்
மகான்களை சந்தித்தால்,
உடனே புண்ணிய பலன் கிடைக்கும் .
கனிவான மொழி,
கடவுளின் வழிபாடு .
நவகிரகங்களை தினந்தோறும் பூசிப்பவர்களுக்கு கஷ்டம் நீங்கி ,சுபம் உண்டாகும் .
Wednesday, 26 June 2013
குழந்தைக்கு ஆண்டு நிறைவு அன்று அக்னி வளர்த்து,
ஆயுஷ்ய ஹோமம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் .
ஒரு பிறவியில் செய்த பாவம், மறுபிறவியிலும் ,
அந்தப் பாவ செயல் அவனை தொடரும் .
துறவிகள், சன்யாசிகளை, எவ்விடத்தில் கண்டாலும்,
நமஸ்கரிக்க வேண்டும் .
அங்க பிரதட்சணம் செய்பவர்கள் மட்டுமே,
ஈர துணியுடன் அங்க பிரதட்சணம் செய்யலாம் .
Tuesday, 25 June 2013
திவசம் செய்யும் திதி ஒரே மாதத்தில் இரண்டு முறை வந்தால்,
பிந்திய திதியில் திவசம் செய்ய வேண்டும் .
தானங்கள் செய்யும் போது எள் கலந்து இருக்க வேண்டும்,
எள் இல்லாத தானம் பயன்படாது .
சுமங்கலிகள் இரவில் பட்டினி கிடந்தால்,
கணவன் ஆயுள் குறைந்து விடும் என்கிறது சாஸ்திரம் .
அமாவாசை, பெளர்ணமி, மாதப்பிறப்பு ஆகிய தினங்களில்,
பர்வன தினங்கள் எனப்படும், ,
இவைகள் பித்ருக்கள் வழிபடுவதற்குரிய நாட்களாகும் .
குழந்தை வேண்டி,கடலில் புண்ணிய ஸ்நானம் செய்ய விரும்புவோன் செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் ஸ்நானம் செய்தல் கூடாது .
கடலானது லட்சுமி தேவி வாசம் புரியும் இடமாக கருதப்படுகிறது, ஆகவேதான் சமுத்திர ஸ்நானம் புண்ணிய கர்மமெனக் கருதப்படுகிறது .
பூசையில் உள்ள சிவலிங்கம், உடைந்து விட்டால் அதனை வலிபடலாகாது .
கடவுளுக்குப் பயப்படுதல்,
ஞானத்தின் ஆரம்ப கட்டம்,
ஞானம் முதிரும் போது,
பயம் அன்பாக மாறுகிறது .
பிரம்மஞானி, காணும் ஒவ்வொன்றிலும் தெய்வத்தையே காண்கிறான் .
கர்ப்பஸ்தீரிகள் 8-வது மாதம் முதல் கோயிலுக்கு செல்லகூடாது .
விஷ்ணு சகஸ்ரநாமம் படித்தால்,
தீராத வியாதிகள் கூட தீரும்,
அந்த வீட்டில் சண்டை வராது,
துர்தேவதைகள் நுழையாது .
இறந்தவர் படங்களை பூஜை அறையில் வைக்க வேண்டாம் .
நமது எல்லா செயல்களுக்கும் ,
கடவுளை பொறுப்பாளி ஆக்கக்கூடாது .
ஒரு காரியத்தை மனத்தால் நினைத்து ,
அதனை முடிப்பவர் சித்தர் .
எல்லாவற்றையும் புரிந்து கொண்டவர் ஞானி ,
இந்த காரியம் நடக்குமா ?
என்று எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில்,
நடத்திக் காட்டுபவரே மகான் .
எவன் ஒருவன் கோபத்தில் பொறுமையுடன் இருக்கிறானோ ,
அவனுக்கு தெய்வம் துணை நிக்கும் .
குலதெய்வத்தை வணங்காமல் இருக்கக் கூடாது .
உலகில் உள்ள சுகங்கள் ,எல்லாம் கட்டிக் கொடுத்தாலும்,
பித்ரு பூஜையை விடக்கூடாது
குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து ,புண்ணிய பலன்தான் .
தாங்க முடியாத துன்பங்களையும் நொடியில் போக்கிடும் சக்தி ,
மகாளய பட்சத்தில் நாம் பக்திச் சிரத்தையுடன் செய்யும்,
பித்ரு பூஜைகளுக்கு உண்டு.
தர்மம் ,கெளரவம் ,குல ஆசாரம்,இவைகளை விட்டு ,
எவன் பெண்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு,
இந்திரியங்களுக்கு வசமாகிறனோ ,
அவனை விட்டு லஷமி நீங்கி விடுவாள் .
Monday, 24 June 2013
பூஜை பொருட்கள் பித்தளை, செம்பு, வெண்கலம், வெள்ளி, ஆகிய தட்டுகளில் மட்டுமே வைக்க வேண்டும் .
கடவுள் வாரந்தோறும் சம்பளம் கொடுப்பதில்லை ,
வாழ்க்கை முடிவில் கொடுக்கிறார் .
அம்பாளுக்கு பிரியமான ராகங்கள் ,
கல்யாணி, தோடி, சாவேரி, தன்யாசி, பைரவி .
சிவபெருமானுக்குப் பிரியமான ராகம் சங்கராபரணம் ஆகும் .
மல்லிகை மலர்களால் பூஜை செய்து வழி பட்டால்,
பாவம் அழிந்து புண்ணியம் கிட்டும் .
இறைவனை மரிக்கொழுந்தால் பூஜை செய்தால் ,
ஆனந்த வாழ்வு அமையும் .
கருடதரிசன மகிமை
ஞாயிறு ---நோய் தீரும் .
திங்கள் ---துன்பங்கள் அகலும் .
செவ்வாய் --அழகு சேரும் .
புதன் ---விரோதிகள் விலகுவார்கள் .
வியாழன் ---பில்லி, சூன்யம்நீங்கும் ,
வெள்ளி ---பூரன ஆயுள் கிடைக்கும் .
சனி ---ஆயுள் விருத்தியாகும் .
எவ்வளவு கற்ற மேதையானாலும்,
அவனுக்கும் கர்ம பலன்கள் உண்டு .
நுட்பமாக நோக்கினால் ஒவ்வொரு உயிர்களிடத்திலும் ,
அதனதன் கர்மாவைப் பொருத்து வேறுபாடு உண்டு .
மனிதர்களுள் ஏற்றத தாழ்வு இருப்பதாக ,
நீ கருதினால் அது பெரிய தவறே .
குபேரனிடம் இருக்கும் நவநிதிகள் .
பத்மம்,மகாபத்மம், மகரம்.
கச்சயம் , குமுதம், நந்தம்,
சங்கம், நீலம், பத்மினி,
சிவலிங்க தரிசனம்
காலை---நோய்கள் அகலும் .\
நண்பகல்---செல்வம்,சவுந்தரியம் பெருகும்.
மாலை ----பாவச் செயல்களின் கொடுமை நீங்கும்.
அர்த்தஜாமம் --முக்தி அளிக்கும்.
கடவுள் துணை இல்லாதவர்களுக்கு ,
அவர்கள் செல்லும் இடம் எல்லாம் ,
நிழல் போலவே துன்பமும் தொடர்ந்து வரும் .
Sunday, 23 June 2013
உலக வாழ்வில் அனைத்து இன்பங்களையும் பெற திருமாலை வழிபட வேண்டும் .
சற்புத்திரனை பெற திருச்செந்தூர் செந்தில் வேலணை வேண்டிக்கொள்ள வேண்டும் .
தடையின்றி வெற்றிகள் பெற ராஜகனபதியை தரிசிக்கவேண்டும் .
யோகத்தில் சிறந்து விளங்க பரமேஸ்வரனை வழிபடவேண்டும் .
இறைவன் நமக்கு அளிக்கும் இன்ப துன்பங்களை மறுக்காமல் ஏற்ப்பதன் பெயர்தான் தைரியம் .
மனசாட்சி என்பது சத்தியத்தின் வடிவம் ,அதுவே தெய்வத்தின் குரல் .
நான் செய்தேன்,இது என் சாமார்த்தியம் என்றெல்லாம் சொல்லக் கூடாது,எல்லாம் அவன் செயல் ,என்று சொல்ல வேண்டும் ,அப்போதுதான் இறைவன் இதயத்தில் குடிபுகுவான் .
ஒருவருக்கு ஆனந்தத்தை தரும் சம்பவம் மற்றொருவருக்கு துக்கத்தை தருகிறது ,
எது நடக்க வேண்டுமோ அது ஈஸ்வர சங்கல்பம் என்று நினைப்பதே சரி .
பரந்த மனமுள்ளவன் ,புத்திசாலி ,சபலபுத்தி இல்லாதவன் ,சூரன்
,ஆகியோரைக்கன்டால் லட்சுமி தேவி அருள் செய்வாள் .
நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள் ,
என்னுடையது என்கின்ற ஆசையை விலக்குங்கள் ,
அமைதி என்கின்ற இறை நிலையை ,
நீங்கள் நெருங்கி விடுவீர்கள் .
ஆயுளை விரும்புகிறவன்,
கிழக்கு முகமாக உட்க்கார்ந்து உன்ன வேண்டும் .
கீர்த்தியை விரும்புகிறவன்,
தெற்கு முகமாக உட்க்கார்ந்து உண்ண வேண்டும் .
செல்வத்தை விரும்புகிறவன் ,
மேற்கு முகமாக உட்க்கார்ந்து உன்ன வேண்டும் .
சத்தியத்தை விரும்புகிறவன் ,
வடக்கு முகமாக உட்க்கார்ந்து உன்ன வேண்டும் .
எவனொருவன் செயலைச்செய்து விட்டு ,
அதன் பலனை ஈஸ்வரனிடம் ஒப்படைத்து,
பற்றுக்கோடில்லாமல் இருக்கிறானோ ,
அவனை பாவம் ஒட்டுவதில்லை .
உனக்கு கஷ்டங்கள் வருகிறது என்றால் இறைவனை நினைக்கிறாய் ,
இல்லாவிடில் இறைவனை நினைப்பது இல்லை .
உங்கள் பாவங்களை இறைவனிடம் கூறினால் அவர் மன்னிப்பார் ,
மனிதர்களிடம் கூறினால் அவர்கள் சிரிப்பார்கள் .
குடும்பம் செழிப்புற்று திகழ மகாலட்சுமியை தரிசிக்க வேண்டும் .
அறிவும், அழகும்பெற முருகப்பெருமானை வணங்க வேண்டும் .
கிருத்திகை ----கந்தன் அருள் கிடைக்கும்
பவுர்ணமி ----எண்ணங்கள் ஈடேறி ஐஸ்வரியங்கள் பெறலாம் .
பிரதோஷம் ---சிவதரிசனம் பெறுவதால் பாவங்கள் விலகும் .
ஏகாதசி விரதம் ---மனசாந்தி கிடைக்கும் .
சஷ்டி உபவாசம் ---சந்ததியினர் நலம் பெறுவார்கள் .
சந்திர தரிசனம் ----மாதம் முழுவதும் நன்மை உண்டாக்கும்
ஒரு விளக்கு திரியில் தீபத்தை ஏற்றி,
அந்ததிரியை தலைக்கீழாக பிடித்தாலும் ,
அந்த தீபமானது மேல்நோக்கியே ஒளிரும் ,
அதுபோல் ஒவ்வொருவருடைய சிந்தனையும் ,
செயலும் மேல்நோக்கு உடையதாகவே இருக்க வேண்டும் ,
அப்போதுதான் வாழ்க்கையும் ஒளிமயமானதாக திகழும் .
உன்னை பாதுகாத்து வரும் இறைவனை ,
எப்பொழுதும் நினைவில் கொள் ,
சிலவற்றைச் செய்ய நினைத்து அதை,
செய்யாமல் விட்டதற்காகக் கவலைப் படாதே.
அலைபாய்வது மனதின் இயல்பு ,
இறைவனின் நாமம் புலன்களை விட,
மிகவும் வலிமை வாய்ந்தது ,
தான் வணங்கும் தெய்வங்கள், விருந்தினர்,வேலைக்காரர்கள் ,
தாய் தந்தை, பிதுர்க்கள் ,அனைவருக்கும் உணவு கொடுத்து ,
திருப்தி செய்ய வேண்டியது கடமையாகும் .
உலகம் தெய்வத்திடம் அடக்கம் ,
தெய்வம் மந்தரத்திடம் அடக்கம்,
மந்திரம் வேதத்தினுள் அடக்கம்,
சாஸ்திரம் தர்மத்தினுள் அடக்கம்,
தர்மம் தெய்வத்தைக் காண வழி வகுக்கிறது.
தன்னை விட வயதில் மூத்தவரிடம்,
சிநேகம் வைத்துக் கொள்ள வேண்டும் .
எச்சில் பட்ட உணவை ஒருவருக்கும் கொடுக்கக் கூடாது .
குழந்தைகளுக்கு நதி,நட்சத்திரங்கள் ,மரங்கள்,
இவற்றின் பெயர்களை வைக்ககூடாது .
ஆண்கள் சனிக்கிழமை பெண்கள் செவ்வாய் வெள்ளி,
தைல ஸ்நானம் செய்வது நல்லது ..
பசுவின் பின் பாகம் ,யானை ,குதிரைகளின் முகம் ,
சுமங்கலி எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் .
பெளர்ணமி ,அமாவாசை ஆகிய நாட்களில்,
இரவில் சாதம் சாப்பிடக்கூடாது
கோயில்களில் பெரியவர்களை நபஸ்கரிக்கக் கூடாது .
குளிக்கும் போது நாம் அணிந்திருக்கும் ஆடைகளை,
நனைத்த பிறகே குளிக்க வேண்டும் .
கதவுகள் ,ஜன்னல்கள் ,இவற்றின் மீது,
ஈரத்துணிகளையோ ,உலர்ந்த துணிகளையோ,
போட வேண்டாம் ,இதனால்,
கடன் தொல்லை உண்டாகும் .
காலை சுமார் 4 மணிக்கு அல்லது 5மணிக்குள்,
விழித்துக் கொள்ள வேண்டும் இந்த நேரத்தில் தேவர்களும்,
,பித்திருக்களும் நமது வீடு தேடி வருகிறார்கள் ,
நாம் தூங்கிக் கொண்டு இருப்பின்,
சபித்து விட்டு செல்கிறார்கள்
இந்த உடல் ஒரு நாள் எரிந்து சாம்பலாகிப் போகிறது,
என்பதை உணர்த்தி தர்ம வழிகளை கடை பிடிக்க வேண்டும் .
தீப பூஜையில் 5முகங்களை ஏற்ற வேண்டும் நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்துவது நல்லது மற்றவை உகந்ததல்ல .
பெண்கள் உப்பு, அன்னம் ,நெய் ,இவற்றை கைகளால் பரிமாறக் கூடாது ,
வளையல் ,நெற்றிப்பொட்டு இல்லாமல் பரிமாறக்கூடாது .
பெண்கல் நெருப்பை வாயால் ஊதி அணைக்கக் கூடாது .
பெண்கள் பூசனிக்காயை உடைக்கக் கூடாது.
பெளர்ணமியில் விரதம் இருந்தால் செல்வம் பெருகும்,
சங்கடஹரசதுர்த்தி அன்று விரதம் இருந்தால் துன்பங்கள் நீங்கும்,
சஷ்டி அன்று விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கைகூடும்,
ஏகாதசி அன்று விரதம் இருந்தால் மோட்சம் கிட்டும்.
நவக்கிரகங்களின் 9சுற்றையும் வலது புரமாகச் சுற்றவேண்டும்,
எதிர் முனையில் சுற்றக் கூடாது .
நெற்றியில் மற்றவர்களுக்கு பொட்டு இடும்போது,
மோதிர விரலால் இடுங்கள் இதனால்,
நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும் ,
கட்டை விரலாலும் இடலாம் மற்ற விரல்கள் நலதல்ல.
கோயிலில் உறையும் தெய்வங்களுக்கு,
புஷ்பம் ,துளசி,வில்வம் கொடுக்காலாம்,
கோயிலைச் சுத்தம் செய்யலாம்,
தீபம் ஏற்றலாம்,இத்தகைய தொண்டு,
மஹா புண்ணியம் எனப்படும்.
தினசரி காக்கைக்கு அன்னம் இட வேண்டும்,
தினசரி பசுவுக்கு புல் கொடுக்க வேண்டும்,
அதிதிக்கு அன்னதானம் செய்யவேண்டும்,
இவ்வாறு செய்பவன் சொர்க்கத்திற்கு போவான்.
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)