Aanmigam
Wednesday, 31 July 2013
துள்ளிய சமதளச்சீர்மை
முற்பிறவியில் பல கர்ம வினைகளைப் பெற்ற ஆத்மாக்கள் ,
இது போன்ற பெற்றோருக்குப் பிளளைகலாகப் பிறந்து,
தன்னுடைய கர்ம வினைகளை அனுபவிக்கின்றன ,
அதனால் செயல் விளைவு நீதியில் ,
அவரவர்கள் செயலுக்கு ஏற்ப ஒரு நிலையை இறைவன் அளிக்கிறான் ,
இதையே மகரிஷி அவர்கள் துள்ளிய சமதளச்சீர்மை ,
என்ற வார்த்தையில் குறிப்பிடுவார் .
Tuesday, 30 July 2013
மயக்கமே மனிதனுள் நிலைப்பதால்
இல்லறத்தாரை குடும்பம் , சுற்றம் என்ற பந்தம் மனம் பற்றற்ற நிலைக்கு செல்லவிடாமலெயெ தடுத்து விடுகின்றது , தன ஆன்ம விடுதலையை சிந்திக்கும் ஞானம் மறைந்து , தம் மக்கள் வழியே பிறவி எடுத்து செல்லும் மயக்கமே மனிதனுள் நிலைப்பதால் ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்கி பயிற்ச்சி செய்ய இயலவில்லை ,
Sunday, 21 July 2013
பிறவித் தொடர்ச்சியாக வரும்,
பிறவித் தொடர்ச்சியாக வரும்,
யோகிகள் இதற்க்கு விதி விலக்கு ,
அவர்கள் குழந்தைப் பருவத்திலேயே ,
யோகத்தை ஆரம்பித்து விடுவார்கள் .
வேத காலத்தில் சிலை வணக்கம் இல்லை
வேத காலத்தில் சிலை வணக்கம் இல்லை ,
கடவுளுக்கு என்று கோயில்கள் இல்லை ,
மனிதனுக்கும் கடவுளுக்கும் தொடர்பு ,
ஏற்படுத்தும் பூசாரிகலும் இல்லை ,
மனிதனே கடவுளை நேரடியாக வணங்கலாம் .
ஆத்மா அனுகூலம்
பச்சை மரத்தில் தீபற்றுவது கடினம் ,
காய்ந்த விறகில் சிறிது நேரம் கழித்து பற்றும் ,
பஞ்சில் மிக எளிதாகப்பற்றும் ,
அதே போன்று சாதகனின் ,
மனப்பக்குவத்திற்கு ஏற்றவாறே ,
ஆத்மா அனுகூலம் கிடைக்கும் காலம் வேறுபடும் .
தன்னுடைய சொந்த பந்தங்களையும் ,
தன்னுடைய சொந்த பந்தங்களையும் ,
ஆசைகளையும் , சுய நலத்தையும் துறத்தல்,
ஆகிய குறிக்கோளை இணைத்து ,
பரமானந்த நிலையடைதலே ,
நோக்கமாக கொண்டவர்கள் என்பதைக் குறிக்கும் .
Subscribe to:
Comments (Atom)